தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல?’ - அற்புதம்மாளின் குமுறல்!

சென்னை: ‘விடுதலை கோப்பு ஆளுநருக்கு போய் இன்னையோட 10 மாசம் முடியுது’ என முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

அற்புதம்மாள்

By

Published : Jul 9, 2019, 11:46 AM IST

Updated : Jul 9, 2019, 3:10 PM IST

பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 29ஆம் ஆண்டு தொடங்கியதை, அவரது தாயார் அற்புதம்மாள் உருக்கமாக பதிவிட்டிருந்தார். அதில், “காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க. இன்னைக்கு 29ஆம் ஆண்டு தொடங்குது. இன்னும் அந்த இரவு விடியல. அரசியல் கொலையில சீரழிக்கப்பட்ட சாமானிய நிரபராதியின் துன்பத்துக்கு உதாரணமா அவன் வாழ்க்கை மாறிடிச்சு. வெளியே நானும், உள்ளே அவனும் போராடி மருகி செத்துப் போகலாம். ஆனா காரணமானவங்கள காலம் அடையாளம் காட்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ட்விட்டரில் #28YearsEnoughGovernor என்ற ஹேஷ்டேக் அதிகளவில் பகிரப்பட்ட நிலையில், #29YearsTooMuchGovernor என்ற புதிய ஹேஷ்டேக் உருவெடுத்தது. தற்போது ஆளுநருக்கு கடிதம் எழுதி 10 மாதமான நிலையில், புதிய பதிவு ஒன்றை அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘வயித்தில குழந்தை இருக்குன்னு தெரிஞ்ச உடனே தாய்க்கு வர்ற பதட்டம் 10 மாசம் கழிச்சு பரவசமா மாறுது. விடுதலை கோப்பு ஆளுநருக்கு போய் இன்னையோட 10 மாசம் முடியுது. என் பதட்டம் தணியல. எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல?’ என்று கனத்த இதயத்துடன் எழுதப்பட்டிருந்தது.

Last Updated : Jul 9, 2019, 3:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details