அண்ணா பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களின் 65 புதிய கண்டுபிடிப்புகளை தேசிய அளவிலான கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளனர். இதை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா தொடங்கி வைத்தார். இதில் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு சூரிய மின்சக்தியில் இயங்கும் வாகனங்கள், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு பயன்படும் நவீன இயந்திரங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.
சென்னையில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கண்காட்சி! - tech
சென்னை: பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கண்காட்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.
anna
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் தாமரைச்செல்வி, இந்த கண்காட்சி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரவும், அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.