நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 நாட்களுக்கு பின்னர் சென்னையில் செய்தியாளர்களை டிடிவி தினகரன் இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேர்தலில் மாபெரும் வெற்றியை எதிர்பார்த்தோம். அது கிடைக்காமல் போனதற்கான காரணம் போக போக தெரியவரும்.
'எங்களுக்கு ஒரு ஓட்டு கூடவா விழல..!' - தினகரன் காட்டம் - தினகரன்
சென்னை: மக்களவைத் தேர்தல் நடந்த சில வாக்குச்சாவடியில் அமமுக கட்சிக்கு ஒரு வாக்குகள் கூட பதிவாகாமல் போனதற்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டுமென தினகரன் தெரிவித்துள்ளார்.
தினகரன்
தான் வாக்களித்த வாக்குச்சாவடியில் அமமுகவிற்கு 14 ஓட்டுகள்தான் பதிவாகி உள்ளது. தனது குடும்பத்தினர், நண்பர்களே 100 பேர் இருக்கிறார்கள். அவர்களின் ஓட்டு எங்கே போனது. அமமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட வாக்களிக்கவில்லையா? இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாட இருக்கிறேன்” என்றார்.