சிதம்பரம் தொகுதி அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் கட்சிகள் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொன்பரப்பி தாக்குதல்: அம்பேத்கர் மன்றங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்! - Ambedkar committee protest
சென்னை: பொன்பரப்பில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அம்பேத்கர் மன்றங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொன்பரப்பி தாக்குதல்: அம்பேத்கர் மன்றங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்!
இந்நிலையில் இன்று திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் அம்பேத்கர் மன்றங்களின் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பொன்பரப்பி கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் வன்முறை சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம், பகுஜன் சமாஜ், தமிழ் பாரதம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.