தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் பாஜக கூட்டணி விரைவில் அறிவிப்பு: முரளிதர ராவ்

புதுச்சேரி: தமிழகத்தில் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை உறுதியாகிவிட்டது எனவும், அதுகுறித்த அறிவிப்பு சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தமிழக பாஜக மேலிடப்பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மேலிடப்பொறுப்பாளர் முரளிதர ராவ்

By

Published : Feb 13, 2019, 12:29 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி குறித்து காய்களை நகர்த்த துவங்கியுள்ளன. இதனால் அரசியல் வட்டாரம் சூடாகியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே அதிமுக மற்றும் திமுக ஆகியவை கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழுக்களை அமைத்து விட்டன.

திமுக-காங்.,-விசிக-மதிமுக-கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளன. அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. மேலும், இந்த கூட்டணியில் தேமுதிக, பாமக இடம்பெறலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் மீனவர்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்ததாவது,

"தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். கடந்த முறை கூட்டணி அமைத்து போட்டியிட்டது போல இம்முறையும் கூட்டணி அமைத்து போட்டியிட பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இன்னும் ஒரு சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details