தமிழ்நாட்டில் தற்போது ஆறு மாநிலங்களவை பதவி காலியாகியுள்ளது. இதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தலா மூன்று உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் அளவிற்கான சட்டப்பேரவை உறுப்பினர்களின் பலத்துடன் உள்ளனர். இதில் அதிமுக கூட்டணி சார்பில் அதிமுகவிற்கு இரு இடங்களும், கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், அதிமுக மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரன் போட்டியிடுகின்றனர்.