தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநகராட்சி அந்தஸ்தைப் பெற்றது ஆவடி! - avadi

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் 14 மாநகராட்சிகள் உள்ள நிலையில், 15ஆவது மாநகராட்சியாக ஆவடி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

aavadi

By

Published : Jun 18, 2019, 3:08 PM IST

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ள நிலையில் 15ஆவது மாநகராட்சியாக ஆவடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியாக மாறும்போது குடிநீர், கழிவு நீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படும், அதே நேரத்தில் சொத்து வரி, குடிநீர் வரி அதிகரிக்கும்.

மாநகராட்சியாக மாறும் ஆவடி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இம்மாநகராட்சியில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும் இடம்பெறும். நெமிலிச்சேரி, நசரத்பேட்டை, காட்டுப்பாக்கம், அயப்பாக்கம், வானகரம் உள்பட 11 கிராம பஞ்சாயத்துக்கள் ஆவடி மாநகராட்சிக்குள் அடங்கும். மொத்தம் 148 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது ஆவடி மாநகராட்சி. இதன் மக்கள் தொகை சுமார் 6.12 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details