தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘யாரிடமும் இல்லாத ஒன்று... எங்களிடம் உள்ளது’ - கமல் - parliament election

பூந்தமல்லி: மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக களமிறங்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இதையும் கோயிலாக நினைத்து ஓட்டுப் போடுங்கள் என்று வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கமல்ஹாசன் பரப்புரை

By

Published : Mar 31, 2019, 8:54 AM IST

சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் ஜெகதீஸ்குமார், திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் லோகரங்கன் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதில் சில;

  • இந்த ஊர் சரித்திரத்தில் இடம் பெற்ற ஊர். அதில் நாங்களும் பங்கு பெற்றுள்ளோம் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
  • எங்களுக்கு ஏன் ஓட்டுப் போடவேண்டும் என மக்கள் கேட்கிறார்கள், மற்ற யாரிடமும் இல்லாத ஒன்று எங்களிடமே உள்ளது, அதுதான் நேர்மை.
  • ஆட்சியில் உள்ளவர்கள் பேரன், பேத்திகளுக்குச் சொத்து சேர்க்கிறார்கள்.
  • இந்த தேர்தல் புரட்சியில் பங்கு எடுத்துக் கொண்டால் நீங்களும் புரட்சி திலகம் ஆகலாம்.
  • விடுமுறை நாட்கள் போலத் தேர்தல் வர உள்ளதால் மக்கள் யாரும் விடுமுறை எனச் சென்று விடாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு பேசிய கமல், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இதையும் கோயிலாக நினைத்து ஓட்டுப் போடுங்கள் என்று நிறைவு செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details