தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த 58 வயதுடைய நபர் கைது

சென்னை: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

11 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம்

By

Published : Apr 8, 2019, 4:25 PM IST

சென்னை வடபழனியைச் சேர்ந்த பெண்மணி பூ வியாபாரம் செய்து வருகிறார். அந்தப் பெண்ணின் சகோதரரின் 11 வயதுடைய மகள் இவருடன் வசித்து வருகிறார்.

நேற்று மாலை சிறுமியை அருகில் உள்ள கடைக்கு சென்று பொருட்களை வாங்க அவரின் அத்தை அனுப்பியிருக்கிறார். அப்போது சிறுமியை பின்தொடர்ந்து வந்த அதே பகுதியை சேர்ந்த கந்தையா என்பவர் சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.

பின்னர் கந்தையாவிடம் இருந்து தப்பி ஓடி வந்த சிறுமி நடந்ததை அந்த பெண்ணிடம் கூறியிருக்கிறார். இதுகுறித்து வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 58 வயதுடைய கந்தையாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details