நாடு முழுவது என்ஐஏ அலுவலர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், 14 பயங்கரவாதிகளை கைது செய்தனர். இவர்களை டெல்லி காவல்துறையினர் தனி விமானம் மூலம் சென்னை விமானநிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அழைத்து செல்லப்பட்டனர்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய 14 பேர் கைது! - serial bomb blast
சென்னை: பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக 14 பேரை என்ஐஏ அலுவலர்கள் கைது செய்து சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தீவிரவத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய 14 பேர் கைது!
கைது செய்யப்பட்ட14 பேரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியாதக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள், இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடதக்கது.