அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மதனத்தூர் மாரியம்மன் கோயில் அருகே சாலை ஓரத்தில் செல்போனில் பேசியவாறு நின்றுகொண்டிருந்தார். அப்போது தா.பழூரில் இருந்து கும்பகோணம் சென்ற லாரி கோயில் சுவரில் பலமாக மோதியது.
லாரி மோதி சாலையோரத்தில் நின்றிருந்த இளைஞர் உயிரிழப்பு
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே சாலையோரத்தில் செல்போனில் பேசிக்கொண்டு இருந்த இளைஞர் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாரி
இவ்விபத்தில் அருகிலிருந்த இளைஞர் செல்வகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகே இருந்த 4 பேர் பலத்த காயமடைந்தது மட்டுமின்றி, இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இந்தவிபத்து குறித்து பழூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:சிறுமி பாலியல் வன்கொடுமை - இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது!