அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே ஊரை சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவரை கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து ஜனனம் அடைத்தனர்.