அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ளது அய்யனார்குளத்துப்பட்டி. இங்கு குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த மேல்நிலைய நீர்தேக்க தொட்டியின் போர்வெல் கடந்த ஒரு மாதமாக பழுதாகியுள்ள நிலையில், இதுவரை சீர் செய்யப்படமால் உள்ளது.
தண்ணீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்! - காலி குடங்களுடன் சாலை மறியல்
அரியலூர் : செந்துறை அருகே பொன்பரப்பி கிராமத்தில், ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து அப்பகுதி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தண்ணீர் கேட்டு கிராம பெண்கள் சாலை மறியல்
இதனால், இப்பகுதியில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் வந்து அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.