தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் தேங்கும் மழைநீர்... அச்சத்தில் பொதுமக்கள்! - தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் உள்ள வள்ளலார் கோயில் தெருவில் மழை நீா் தேங்குவதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும் அபாயம்

அரியலூர்: வள்ளலார் கோயில் தெருவில் மழைநீா் தேங்குவதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து நோய் பரவும் அபாயம் இருப்பதாக மக்கள் தவித்து வருகின்றனர்.

road damage
சாலையில் குளம் போல் தேங்கும் மழை

By

Published : Nov 28, 2019, 4:18 PM IST

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் உள்ள வள்ளலார் கோயில் தெருவில் மழை நீா் தேங்குவதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும் அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர். இந்த சாலை சுமார் 18 வருடங்களுக்கு முன்பு சிமெண்டால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் இந்த சிமெண்ட் சாலையில் சாலை முழுவதும் மழைநீர் நிரம்பி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இங்கு வீட்டினுள் மழை நீர் புகுந்து வீடுகள் சேதமாகும் சூழ்நிலையில் உள்ளது.

சாலையில் குளம் போல் தேங்கும் மழை
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்," ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மேலும் அதிகாரிகள் பார்வையிட வருவார்கள் பார்ப்பார்கள் சென்று விடுவார்கள், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, வள்ளலார் கோயில் தெரு சாலையை உயர்த்தி, இரண்டு புறமும் தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்கால் அமைத்துத்தரவேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details