தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி - வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

அரியலூர்: வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் சார்பில் மனித சங்கிலி மற்றும் பேரணி நடைபெற்றது.

பேரணி

By

Published : Mar 28, 2019, 12:58 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக அரியலூரில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் சார்பில் அண்ணா சிலை அருகே மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
மாணவர்கள் 100% வாக்களிப்போம் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் போன்ற பதாதைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டனர். இதில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கலந்துகொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் மாணவர்கள் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details