அரியலூர் மாவட்டம் செந்துறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் கொடுத்தனர்.
நடிகை குஷ்புவின் புகைப்படத்தை எரித்து விசிக ஆர்ப்பாட்டம்! - குஷ்புவின் புகைப்படம் எரிப்பு
அரியலூர்: செந்துறையில் திருமாவளவன் மீது புகார் கொடுத்த பாஜகவினரை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, நடிகை குஷ்புவின் புகைப்படம் எரிக்கப்பட்டது.
விசிக ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், புகார் கொடுத்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரியும், குஷ்புவை கைது செய்ய வலியுறுத்தியும் விசிகவினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, குஷ்புவின் புகைப்படத்தை விசிகவினர் எரித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து புகைப்படங்களை கைப்பற்றினர். மேலும், இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.