அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடத்தில் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையில் அடையாளம் தெரியாத ஒருவர், முகமூடி அணிந்து நேற்று இரவு பின்பக்க சுவற்றை துளையிட்டார். அப்போது, அங்கிருந்த சிசிடிவி கேமரா லென்சில் பப்ளிகாம் ஒட்டி வைத்து நூதன முறையில் செயல்பட்டார்.
நகை அடகு கடை சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி!
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே நகை அடகு கடை சுவற்றில் துளையிட்டு திருட முயன்ற முகமூடி கொள்ளையனை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Try to theft
இதனிடையே சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்ததைத் தொடர்ந்து அந்த நபர் தப்பி ஓடினார். இதனால் அடகு கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின.
இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடம் சென்ற ஆண்டிமடம் காவல் துறையினர், கடையின் பின்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பப்ளிகாம் ஒட்டி வைத்து திருட முயற்சி செய்த காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
TAGGED:
Cctv footage theft attempt