தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி நாளில் உங்கள் ராசிக்கான பலன்கள் எப்படி..? - தீபாவளி

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தீபாவளி நாளுக்கான பலன்களைக் காணலாம்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 24, 2022, 6:28 AM IST

மேஷம்:இன்று நல்ல செய்தி கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மகிழ்ச்சி கிடைக்கும். இது நிதி ஆதாயம் குறித்த செய்தியாக இருக்கலாம் அல்லது நண்பர்களை சந்திக்கும் செய்தியாக இருக்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து விஷயங்களிலும் 100 சதவீத பங்களிப்பை கொடுப்பீர்கள். அதற்கு சிறந்த வகையில் பலன் கிடைக்கும்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு கற்பனை திறன் அதிகம் இருக்கும். புதிய விஷயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். உங்களது படைப்பாற்றல் காரணமாக உங்கள் பணியிடத்தில் உறுதிப்பாட்டுடன் பணியாற்றுவீர்கள். உங்களது புகழ் காரணமாக, எதிர்பாராத வகையிலான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்: உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், உற்சாகமும் மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் அதிக நேரம் செலவழிப்பீர்கள். வீட்டை அலங்கரிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் நீண்ட ஆலோசனைகள் காரணமாக, திறக்கப்படாமல் உள்ள விஷயங்கள் சுமுகமாக தீர்க்கப்படும்.

கடகம்: இன்றைய தினத்தை பொருத்தவரை, நீங்கள் கடினமாக உழைத்த பணத்தை செலவிடுவதில் எச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். தேவையில்லாத நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவும், உங்களுக்குப் நெருக்கமானவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவும் நீங்கள் அவ்வாறு செயல்படுவது நல்லது. உங்கள் பணியிடத்தில் வேலை பார்க்கும் உங்கள் தன்மையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.

சிம்மம்:உங்களுக்கு அனைத்தும், தங்கத் தட்டில் வைத்து கொடுக்கப்படும் என்ற எண்ணத்தை கொண்டிருக்க வேண்டாம். உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. இன்று நீங்கள் பொறுமையாக செயல்படுவது நல்லது. உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் இல்லாமல் இருக்கும்.

கன்னி: சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்து கொள்ளும் உங்களது தன்மையின் மூலம் நீங்கள் உங்கள் சுற்றியிருக்கும் மக்களை மகிழ வைப்பீர்கள். எதிர்பாராத சம்பவம் நேரிடலாம். கவலை கொள்ளத் தேவையில்லை. அவை உங்களுக்கு சாதகமான விஷயமாகவே இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும்.

துலாம்:இன்று உங்களுக்கு சாதகமான நாளல்ல. அது குறித்து நீங்கள் மனம் வருத்தம் அடைய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. நல்லது நடக்கவில்லை என்றால் அது கெடுதல் என்று பொருள் இல்லை. சிறிது மன அழுத்தங்கள் இருந்தாலும், மாலையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது உறுதி. மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள்.

விருச்சிகம்: வாழ்க்கை என்பது ஒரு சிறந்த ஆசிரியர் ஆகும். அதை நீங்கள் இன்று அனுபவித்து அறிவீர்கள். கடும் போட்டியின் மத்தியில், சந்தையில் வெற்றி பெறுவது எப்படி என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இதனால் எதிர்ப்புகள் வந்தாலும், அது உங்களை பாதிக்காது. தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது கடவுள் இயல்பு என்பதை நினைவில் கொள்ளவும். அதனால் நீங்கள் தவறு செய்தாலும் அது குறித்து கவலை கொள்ள வேண்டாம்.

தனுசு: உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் உடன் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தினரும் நண்பர்களும், தங்கள் ஆலோசனைகளையும் வழங்குவார்கள். உற்சாகமான குதுகலமான மாலை உங்களுக்காக காத்திருக்கிறது

மகரம்: திருமணம் ஆகாதவர்கள் என்றால், நீங்கள் கனவில் சந்திக்கும் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் வாழ்க்கைத்துணையை சந்தித்ததில், நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களிடம் நீங்கள் மனம் திறந்து பேசுவீர்கள். உங்கள் காதல் துணையும் உங்கள் மீது, நிபந்தனையற்ற அன்பைப் பொழிவார்கள்.

கும்பம்: இன்று உங்களுக்கு குதூகலம் நிறைந்த நாளாக இருக்கும். ஆனால் உங்கள் சக பணியாளர்கள், தங்கள் வேலையை முடிக்க அதற்கான காரணங்களை உங்களை தெரிவிப்பார்கள். அதனால் உங்களது பொறுப்புகளை நீங்களே முடிப்பது நல்லது. உங்கள் மனதிற்குப் பிடித்தவர், உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்:இன்று, நீங்கள் வீழ்த்த இயலாத நபராக இருப்பீர்கள். நீங்கள் பலவகையான பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறனைப் பெற்று இருப்பீர்கள். உங்களது செயல் திறனை பார்த்து மற்றவர்கள் பாராட்டுவார்கள். பெண்களைப் பொறுத்தவரை, இன்று லாபகரமான நாளாக இருக்கும் என்பதால், ஊக்கம் பெறுவார்கள்.

இதையும் படிங்க: சங்கரநாராயணசாமி கோயிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் காட்சி கொடுக்கும் வைபவம்

ABOUT THE AUTHOR

...view details