அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரம் என்ற இடத்தில் ஆனந்தவேல் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
தேர்தல் பறக்கும் படையினரிடம் வசமாக மாட்டிக்கொண்ட கண்டெய்னர் லாரி...! - Jeyakondam
அரியலுார்: ஜெயங்கொண்டம் அருகே கண்டெயினர் லாரியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
tobacco-things-seized
இதையடுத்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்ததில், அவர் பெயர் நேரு என்பதும், கண்டெய்னர் மூலம் பெங்களூருவிலிருந்து கும்பகோணத்திற்கு செல்வதும் தெரியவந்தது. தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதில் சுமார் 20 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.