திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிவசுப்பிரமணியன் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் இவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் எம்.பி. சிவசுப்பிரமணியன் உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி! - விடுதலை சிறுத்தைகள் கட்சி
அரியலூர்: மறைந்த திமுக முன்னாள் எம்.பி. சிவசுப்பிரமணியன் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
திமுக
இந்நிலையில், இன்று அவரது உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் சிவசுப்பிரமணியன் மகனும், மாவட்டச் செயலாளருமான எஸ்.எஸ். சிவசங்கர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அதேசமயம் திமுகவின் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசாவும் மரியாதை செலுத்தினார்.