தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலத்தடி நீரைக் காக்க 30ஆயிரம் பனை விதைகளை நட்ட மாணவர்கள்! - Thirty Thousand Palm Tree Plantation In Ariyalur

அரியலூர்: தோட்டக்கலைத்துறை சார்பில் வறட்சி காலங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையிலும், நிலத்தடி நீர் ஆதாரத்தை காக்கும் வகையிலும் 30 ஆயிரம் பனை விதைகளை மாணவா்கள் விதைத்தனா்.

Thirty Thousand Palm Tree Plantation In Ariyalur

By

Published : Oct 20, 2019, 10:04 AM IST

அரியலூர் மாவட்டம் அருகே உள்ள தா.பழூரில் தோட்டக்கலைத்துறை சார்பில் 30 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடங்கியது. வருங்காலங்களில் வறட்சியைச் சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏரியின் கரைகளிலும் பனை விதை நடும் திட்டம், தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தா.பழூரில் உள்ள கோரை புலி என்ற ஏரியைச் சுற்றியுள்ள கரைகளில் 30 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது. இதில், தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தோட்டகலைத்துறை அலுவலர்கள் பங்கேற்று பனை விதைகளை விதைத்தனர்.

ஏரியில் பனைவிதைகளை விதைக்கும் மாணவர்கள்

இதையடுத்து, பனை விதைகள் விதைப்பதால் நீர் ஆதாரம் காக்கப்படும் என மாணவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

இதையும் படிங்க: சேலம் ரவுடி தனசேகரன் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது!

ABOUT THE AUTHOR

...view details