அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவர் கொத்தனார் வேலை பார்த்துவந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் ராஜாங்கம் இரவு குடித்துவிட்டு சண்டை போட்டு மனைவி, மகன்களை அடித்துள்ளார். இதனால், காவல் துறையிடம் புகார் கொடுக்க இரண்டாவது மனைவி பரஞ்ஜோதி தனது மகன் சாமியப்பனை அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டிற்குச் சென்றார்.