தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீறிப்பாய்ந்த காளைகள் 13 மாடுபிடி வீரர்கள் படுகாயம் - jallikkattu

அரியலூர்:ஜெயங்கொண்டம் அருகே பூவாய்குளம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 13 மாடுபிடிவீரர்கள் காயமடைந்தனர்.

அரியலூர் ஜல்லிக்கட்டு போட்டி

By

Published : Apr 27, 2019, 1:22 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பூவாய்குளம் கிராமத்தில் ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது. இந்தப்போட்டியில் அரியலூர், திருச்சி, கடலூா், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 400க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டன. சீறிவரும் காளைகளை அடக்க 150 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

அரியலூர் ஜல்லிக்கட்டு போட்டி

ஜல்லிக்கட்டு போட்டியினை காண வந்த மக்கள் மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், பணம், தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளை கால்நடை மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்த பின்னரே போட்டிக்கு அனுமதிக்கப்பட்டது.

இதேபோல மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பாசோதனைகள் செய்யப்பட்டது. மிகச்சிறப்பாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிவந்த காளைகளை அடக்க முயன்றபோது 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details