கிருஷ்ணகிரி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்தவர் ராஜா. இவரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துவிட்டு தலைமறைவு ஆகிவிட்டனர். இந்நிலையில், ராஜாவை கொலை செய்ததைக் கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்லப்பட்ட டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்! - protest
அரியலூர்: டாஸ்மாக் ஊழியர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்ளைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
protest
அப்போது வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
- ராஜாவை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.
- தொழிலாளர் சட்டத்தின் படி எட்டு மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும்.
- ராஜாவின் குழந்தைகள் படிப்புச் செலவுகளை தமிழ்நாடு அரசு முழுமையாக ஏற்க வேண்டும்.
- அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.
- அவருக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகை 10 லட்சத்தை 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தி டாஸ்மாக் ஊழியர்கள் கோஷங்களை எழுப்பினர்.