தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து! - தேசிய நெடுஞ்சாலை

பெரம்பலூர்: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

lorry

By

Published : May 9, 2019, 2:03 PM IST

சென்னையில் இருந்து விருதுநகர் நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது பெரம்பலூர் மாவட்டம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுவாச்சூர் அருகே வந்தபோது பாய் ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று குறுக்கே வந்தது.

இதை பார்த்த டேங்கர் லாரி ஓட்டுநர் 'திடீர்' பிரேக் போட்டார். இதில் லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிரேன் உதவியுடன் கவிழ்ந்த டேங்கர் லாரியை மீட்டனர். பின் இந்த விபத்து குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details