சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இந்நிலையில், இன்று (நவ.1) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.120 அதிகரித்து , ரூ.36,064-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்க விலை நிலவரம் என்ன? - மீண்டும் உயர்வு கண்ட தங்கத்தின் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது.
தங்க விலை
மேலும், தங்கம் கிராமிற்கு 15 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 508 விற்பனையாகிறது, சவரனுக்கு ரூ.120 அதிகரித்து , ரூ.36,064-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.68.90-க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க: ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி - அரசாணை வெளியீடு