குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பாஜகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, அரியலூர் மாவட்ட பாஜக சார்பில் அரியலூர் தேரடியிலிருந்து ஊர்வலமாக வந்து குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வருகின்றனர்.
மேலும் இதனை அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஐயப்பன், நகரத்தலைவர் கோகுல் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.