தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரும்பு விலை சரிவு: வேதனையில் விவசாயிகள் - அரியலூர் கரும்பு விவசாயிகள்

அரியலூர்: பொங்கல் பண்டிகைக்காக பயிரிடப்பட்டுள்ள செங்கரும்புகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்தாண்டு தங்களுக்கு கசப்பு பொங்கல் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Sugarcane prices decline
கரும்பு விலை சரிவு

By

Published : Jan 9, 2020, 12:56 PM IST

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமானது பொங்கல் திருநாள். இந்த பண்டிகையின் மிக முக்கியமான
ஒன்று செங்கரும்பு.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிகளவில் பயிரடப்படுவது செங்கரும்புதான். ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு கரும்பு வழங்குவதற்கு விவசாயிகளிடம் அரசு கொள்முதல் செய்கிறது. இதை கருத்தில் கொண்டு இந்தாண்டு, விவசாயிகள் அதிகளவில் கரும்பை பயிரிட்டனர். ஆனால், தற்போது கரும்பை உள்ளூர் விவசாயிகளிடமிருந்து வாங்காமல், வெளிமாவட்டங்களில் இருந்து அரசு கொள்முதல் செய்கிறது.

மேலும், உள்ளூர் விவசாயிகளிடம் ஒரு கரும்பு 13 ரூபாய்க்கு கேட்கப்படுவதால், தங்களுக்கு விலை போதவில்லை என்றும் அரசை நம்பி பயிரிட்ட கரும்புகள் அனைத்தும் வீணாகிவிட்டதாக கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உழவர் திருநாளில் அனைவரும் இனிப்புடன் கொண்டாடுவதற்காக, கரும்பு பயிரிடப்பட்ட விவசாயிகளின் வாழ்க்கை கசப்பாக மாறிவிட்டது. தமிழ்நாடு அரசு கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையை உணர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட வழிவகுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'கரும்பு வாங்க யாரும் வரவில்லை' - வேதனையில் விவசாயிகள்

ABOUT THE AUTHOR

...view details