இப்போட்டியை பள்ளி முதல்வர் அந்தோணிசாமி செழியன் தொடக்கி வைத்தார். போட்டியில் மதுரை, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 அணிகள் கலந்து கொண்டன.
காலையில் தொடங்கிய முதல் போட்டியில் மதுரை இந்திரா காந்தி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி அணி, விழுப்புரம் லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளி அணியை 6 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது.
மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள்; இன்று தொடக்கம்! மற்றொரு போட்டியில் திருச்சி மான்ஃபோர்ட் மெட்ரிகுலேஷன்மேல் நிலைப் பள்ளி அணி, திண்டுக்கல் ஆர் சி மேல்நிலைப் பள்ளி அணியை 4 - 0 என்ற கணக்கில் வென்றது. போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடைபெற்று வருகிறது
இறுதிப் போட்டிகள் நாளை மாலை நடைபெறும் என விழாக் குழு தெரிவித்துள்ளது. போட்டியில் வெற்றி பெறுவதற்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.