ஜெயங்கொண்டம் அருகே அருள்மொழி கிராம கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக தா.பழூா் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இந்நிலையில் நேற்று இரவு அருள்மொழி கிராமப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், கொள்ளிடம் ஆற்றில் உரிய அனுமதியின்றி 6 மாட்டு வண்டிகள், ஒரு சரக்கு வானத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தவர்களைச் சுற்றி வளைத்தனர்.
அனுமதியின்றி மணல் அள்ளிய 12 பேர் கைது! - vehicle seized
அரியலூர்: அரியலூர் - கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 12 பேரை கைது செய்து, வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி மணல் அள்ளிய 12 பேர் கைது!
இதனையடுத்து மணல் அள்ளிய 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 12 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.