அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழர்களின் வீரத்தை நிலைநாட்டிய மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவில் முதன் முறையாக ராஜேந்திர சோழனின் திருவுருவ ஓவியம் வெளியிடப்பட்டது. சோழ மன்னர்களில் ராஜேந்திர சோழன் கடல்கடந்தும் தெற்காசிய நாடுகளில் இன்றும் சரித்திர சாதனை படைத்தவர் என்று பெயர் பெற்றவர்.
ராஜேந்திர சோழன் திருவுருவ ஓவியம் வெளியீடு! - drawing
அரியலூர்: சோழ மன்னன் ராஜேந்திர சோழனின் 1004ஆவது பிறந்த நாள் விழாவில் முதன் முதலாக திரு உருவ ஓவியம் வெளியிடப்பட்டது.
கங்கை வரை படையெடுத்து அதனை வெற்றி பெற்றதன் காரணமாக கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கி பிரம்மாண்ட பெருவுடையார் கோயிலைக் கட்டி அழியாப் புகழைப் பெற்றவர் ராஜேந்திர சோழன். இவ்வாறு புகழ்பெற்ற ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நட்சத்திரத்தை ஒவ்வொரு ஆண்டும் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று நடைபெற்ற 1004 ஆவது பிறந்தநாள் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய நடனங்கள் பரதநாட்டியம், பறை இசை ஆகியவை அறங்கேறியது. இதற்கான ஏற்பாடுகளை முடிகொண்டான் தமிழ்ச் சங்க தலைவர் கோமகன் ஏற்பாடு செய்திருந்தார். இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விரைவில் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைப்பது என முடிவு எடுக்கப்பட்டது