தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு - அரியலூர் தொடங்கிய போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது

அரியலூர்: பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமை அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

Pulse polio
Pulse polio

By

Published : Jan 19, 2020, 1:26 PM IST

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. 5 வயதுக்கு உள்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், தவறாமல் இம்முகாம்களில் கலந்துகொண்டு ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.

அரியலூர் மாவட்டம் பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமை அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ரத்னா கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.

அரியலூர் தொடங்கிய போலியோ சொட்டு மருந்து முகாம்

மாவட்டத்தில் சுமார் 68 ஆயிரத்து 156 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. நகர்ப்புறங்களில் 46 மையங்களும், ஊரகப் பகுதியில் 496 மையங்களும் என மொத்தம் 648 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 2ஆயிரத்து 340 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: காரை துரத்திய காட்டு யானை - அலறிய பயணிகள்

ABOUT THE AUTHOR

...view details