தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பறிமுதல்! - மாவட்ட ஆட்சியர்

அரியலூர்: பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் சென்றால் நெகிழிப் பைகளின் பயன்பாடு குறையும் என்ற நோக்கத்தில் நெகிழிப் பொருட்களை அரியலூர் நகராட்சி துப்புரவு அலுவலர்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

File pic

By

Published : May 9, 2019, 3:48 PM IST

தமிழ்நாட்டில் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து 14 வகையான பொருட்கள் பயன்படுத்துவதற்கும் விற்பதற்கும் தமிழ்நாடு அரசு தடை ஆணை பிறப்பித்தது.

ஆனால் அரியலூரில் நெகிழிப் பொருட்கள் உபயோகம் அதிகமாக இருந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு இது சம்பந்தமாக ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

மாவட்ட ஆட்சியர் அரியலூர் நகராட்சி நெகிழிப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் முத்து முகமது தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அரியலூர் கடை வீதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட மூன்று லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

மேலும் கடைகளுக்கு அபராதம் விதித்தனர். மீண்டும் தடை செய்யப்பட்ட பொருட்களை பெற்றால் கடைகளுக்கு சீல் வைப்பதாக எச்சரித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details