அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 38 மிமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இந்த மழை சேமிக்க முடியாமல் வீணாகியுள்ளது. பொதுப்பணித் துறை அலுவலர்கள் வாய்க்கால்களை ஆழப்படுத்தாமலும், ஏரிகளுக்கு மழைநீர் செல்லும் பாதையை தூர்வாராமல் விட்டதே மழைநீர் வீணானதற்கு காரணமாக கூறப்படுகிறது.
பொதுப்பணித் துறை அலுவலர்களின் அலட்சியத்தால் வீணாகும் மழைநீர்! - ariyalur
அரியலூர்: பொதுப்பணித் துறை அலுவலர்களின் அலட்சியம் காரணமாக முறையாக சேமிக்காததால் மழைநீர் வீணாவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மழைநீர்
இதனால் ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. மழை பெய்தும் அதனை சேமிக்காமல் வீணாவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடிய நிலையில், வான் தந்த நீரை வீணக்குவதா என சமூக செயற்பாட்டாளர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இனியாவது பொதுப்பணித் துறை அலுவலர்கள் விரைந்து செயல்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.