தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை!

நவம்பர் 1ஆம் தேதியன்று மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள்  நர்சரி பள்ளிகள் திறப்பு  மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை  Nursery schools are not open  no chance to open Nursery schools  play schools  nursery school opening
பள்ளி

By

Published : Oct 23, 2021, 10:38 AM IST

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை சற்றே குறைந்ததையடுத்து, கடந்த செப்டம்பர் 1 முதல் முதல் கட்டமாக ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் நவம்பர் 1ஆம் தேதி முதல் முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து மழலையர் நர்சரி மற்றும் அங்கன்வாடி மையங்களும் நவம்பர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நர்சரி பள்ளிகளில் மாணவர்கள் வருகைக்கான முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவம்பர் ஒன்றாம் தேதி திறக்க வாய்ப்பில்லை என அரசு அறிவித்துள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: மெகா பேரணி.. காஷ்மீர் செல்லும் அமித் ஷா... பாதுகாப்பு தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details