அரியலூர் நகரின் மையப்பகுதியில் ரயில் நிலையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே பள்ளி ஏரியில் இறங்கி பொதுமக்கள் கொட்டாங்குச்சியில் தண்ணீர் நிரப்பி ஏறி நிரப்பும் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்தின் வாயிலாக மாவட்ட அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் குடிநீரின்றி மக்கள் படும்பாட்டை தெரிவிக்கவே கொட்டாங்குச்சியில் தண்ணீர் எடுத்து ஏரியை நிரப்பும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
கொட்டாங்குச்சியில் தண்ணீர் எடுத்து ஏறி நிரப்பும் நூதன போராட்டம்! - ஏறி
அரியலூர்: நூதன முறையில் கொட்டாங்குச்சியில் தண்ணீர் எடுத்து ஏறி நிரப்பும் போராட்டத்தை பொதுமக்கள் மேற்கொண்டனர்.
நூதன போராட்டம்
மேலும், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றை கோடை காலத்திலேயே ஆழப்படுத்தினால் வரும் மழைக்காலங்களில் நீரை சேமிக்க ஏதுவாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அரியலூர் நகரில் பெரும்பாலான ஏரிகள் வற்றிவிட்டன. எனவே, மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் உடனடியாக தீர்வு காணாவிட்டால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும்.