அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தேசிய மக்கள்தொகை பதிவேடு எதிர்ப்பு தெரிவித்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் இத்தகைய திட்டங்களை அமல்படுத்தமாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தினர்.
சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராகத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேறற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: ’போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றம்’