தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் - அமைச்சர் சிவசங்கர்

அரியலூரில் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உதவி உபகரணங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 5, 2023, 10:58 PM IST

அரியலூர்மாவட்ட ஆட்சியரகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ரூ.7 லட்சம் மதிப்பில் 79 வகையான உதவி உபகரணங்கள் 79 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தட்சணாமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அதேபோல, அரியலூர் மாவட்டத்தில் 18 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77 லட்சம் மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றிதழ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் 72 கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்று நிலுவையில் இருந்த 2,363 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த 26,786 உறுப்பினர்கள் பெற்ற ரூ.49.06 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில், 18 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த 206 உறுப்பினர்களுக்கு ரூ.77.08 லட்சம் மதிப்பில் கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க:பொங்கல் பரிசில் தேங்காய் வேண்டும்: இளநீருடன் வந்து பாஜக ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details