அரியலூர் மாவட்டம், உதயநத்தம் காலணி தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகன் ஆனந்த் (25).
வாட்ஸ்அப்பில் இனவெறியைத் தூண்டிய நபர் கைது! - காணொளி
அரியலூர்: இனவெறியைத் தூண்டும் வகையில் வாட்ஸ்அப்பில் காணொளி வெளியிட்ட நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர், மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு பேசியதுபோன்று ஆடியோவுடன் பாமக கொடியுடன் சிலர் நடந்துபோவது போன்ற டிக்டாக் செயலி மூலம் காணொளி பதிவிட்டு, வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார்.
இதனை அறிந்த உதய நத்தம் கிராம நிர்வாக அலுவலர் சண்முக கார்த்திகேயன், அந்த காணொளி இனவெறியைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருப்பதாகக் கூறி ஆனந்த் மீது காவல் துறையில் புகார் அளித்தார். இதன்பேரில், ஆனந்தை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.