அரியலூர் மாவட்டம் அணைக்கரையில் இருந்து கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கான பாசன நீரை அமைச்சர் சம்பத் இன்று திறந்து வைத்தார். அணைக்கரையில் இருந்து தெற்கு ராஜன் வாய்க்காலில் 520 கன அடியும், வடக்கு ராஜன் வாய்க்காலில் 400 கன அடியும், வடவாறு வாய்க்காலில் 1,800 கன அடியும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணைக்கரை கீழணையில் தண்ணீர் திறப்பு: அமைச்சர் சம்பத் பெருமிதம் - டெல்டா பகுதி
அரியலூர்: அணைக்கரை கீழணையில் இருந்து டெல்டா பகுதிகளுக்கான பாசன தண்ணீரை அமைச்சர் சம்பத் திறந்து வைத்தார்.
sampath
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் இந்த ஆண்டு நெல் உற்பத்தியில் முதலிடம் பிடிக்கும் என்றும், தண்ணீர் திறப்பதில் தாமதம் இல்லை, சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.