தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 22, 2020, 1:12 PM IST

ETV Bharat / state

அரியலூரில் ஜல்லிக்கட்டு போட்டி: 350 வீரர்கள், 500 காளைகள் பங்கேற்பு!

அரியலூர்: புனித அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகளும் 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

Jallikattu
Jallikattu

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிங்கராயபுரம் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 500 காளைகளும் 350 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.

இதில் வெற்றிபெற்ற வீரர்களுக்கும் பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சேர் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. காளைகளின் உரிமையாளர்கள், தங்கள் காளைகள் மீது பணம், தங்க காசு, மொபைல் உள்ளிட்டவைகளை பரிசாக அறிவித்தனர். அப்போது, காயமடைந்த 12 மாடுபிடி வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Jallikattu

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அரியலூர், தஞ்சை, பெரம்பலூர், கடலூர் நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகள் கலந்துகொண்டன.

இதையும் படிங்க: இனி இப்படியொரு இழப்பு வேண்டாம் - 'இந்தியன் 2' பட விபத்து குறித்து சிம்பு உருக்கம்!

ABOUT THE AUTHOR

...view details