மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சார்பாக இந்தியா முழுவதும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெறும்.
மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மூலமாக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் செயல்படுத்திவருகின்றது.
இந்நிலையில் இந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், மாவட்டத்தில் உள்ள 36 பள்ளிகளில் இருந்து 55 மாணவர்கள் கலந்துகொண்டு தங்களுடைய படைப்புகளை காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்
அதில் மிக சிறப்பான ஆறு மாணவர்களின் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க அனுப்பப்படவுள்ளனர்.
மாணவர்களின் அறிவியல் கண்காட்சி: 36 பள்ளிகள் பங்கேற்பு! இதையும் படியுங்க: ராக்கெட் ஏவுதலை நிகழ்த்திக் காட்டிய அரசுப் பள்ளி மாணவர்கள் !