பிரபல பின்னணி பாடகியான பி. சுசிலா இன்று தனது 83ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் தனது தேன் போன்ற இனிமையான குரலில் ரசிகர்களை மிதக்க செய்துள்ளார். மேலும் தனது காந்த குரலில் ரசிகர்களை கவர்ந்து மயங்கச் செய்தவர்.
ஆந்திராவில் இருந்து வந்த இவர், தமிழ்நாட்டையே தனது குரல் வளத்தினால் ஆளுமை செய்து வருகிறார். இவர் 1935 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே புலம்பாக்கத்தில் பிறந்தார். இவருக்கு இளம் வயதில் இருந்தே இசை மீது காதல் ஏற்பட்டது. இதனால் பள்ளி படிப்பை முடித்த உடன் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை படித்தார்.
படிப்பு முடிந்து சென்னையில் வானொலி நிலையத்தில் பாடகியாக சேர்ந்த இவருக்கு, படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இவரது பாடல்கள் மக்களின் மத்தியில் அதிகம் பிரபலமானது. இவரும், டி.எம். சௌந்தர்ராஜனும் இனைந்து பல பாடல்கள் பாடியுள்ளனர். அதில் “விஸ்வநாதன் - ராமமூர்த்தி” இசையில் இவர்கள் இருவரும் பாடிய பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து “உயர்ந்த மனிதன்” படத்தில் சுசிலா பாடிய “நாளை இந்த வேளை” பாட்டும், “சவாலே சமாளி” படத்தில் “சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு” பாட்டும் இருமுறை தேசிய விருது பெற்றது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு பாடல்களிலும் வல்லமை பெற்றவர். கிட்டதட்ட 30,000 பாடல்களுக்கு மேல் பாடிய இவர், பல பக்தி பாடல்களை பாடியுள்ளார்.
இதையும் படிங்க: மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 'பீஸ்ட்' பட செட்