அரியலூர் மாவட்டம் உள்ள ஜமீன் ஆத்தூர் கிராம மக்களின் ஒரே வாழ்வாவாதாரமாக விவசாயம் உள்ளது. இக்கிராம விவசாயிகள் மொத்தம் 44 மின் மோட்டார்கள் மூலம் விவசாயம் செய்கின்றனர்.
விவசாயிகள் மின்மாற்றியின் திறனை அதிகரிக்கக் கோரிக்கை - Village
அரியலூர்: மின்மாற்றியின் குதிரை திறனை அதிகரிக்க மின்வாரியத்திடம் விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இந்நிலையில், மின்மாற்றிகளின் குதிரை திறன் குறைவாக உள்ளதால் அவை அடிக்கடி வெடித்துவிடுகின்றன அல்லது பழுதாகிவிடுகின்றன. இது குறித்து, ஜமீன் ஆத்தூர் கிராம விவசாயிகள் அரசு அலுவலர்களிடம் முறையிட்டபோது, அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தங்களது மோட்டாரை இயக்கி விவசாயம் செய்யும்படி அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.
மின்மாற்றிகளின் திறன் குறைவாக உள்ளதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே மின்வாரியம் ஜமீன் ஆத்தூர் கிராம விவசாயிகளுக்கு உதவுமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.