அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட கோழபுரம் அருகே கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழனால் குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி அமைக்கப்பட்டது. தற்போது இந்த ஏரி மண் மேடாகவும், மழைக்காலங்களிலும் தண்ணீரை சேமிக்க முடியாத நிலையிலும் உள்ளது.
பொய்த்துப்போன மழை: வர்ண பகவானின் கொடும்பாவி எரிப்பு!
அரியலூர்: மழை வேண்டி காலிKD குடங்களுடன் ஏரியில் இறங்கி வர்ணபகவானின் கொடும்பாவியை எரித்து விவசாயிகள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வறண்டு கிடக்கும் ஏரியில், காலிக் குடங்களுடன் வர்ணபகவான் கொடும்பாவியை எரித்து ஆற்றுபாசன விவசாயிகள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர். இது குறித்து விவசாயிகளிடம் பேசுகையில், பொன்னேரி உள்ளிட்ட அனைத்து பாசன ஏரிகளையும் தூர்வாரி வரத்து, வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீண்ட வருடங்களாக கோரிக்கை வைத்துவருகிறோம். ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கப்படவுள்ளது. சாலைகள் அமைக்க பள்ளமான இடங்களில் கொட்டி நிரப்பப்படும் மண்ணை பொன்னேரியிலிருந்து எடுத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். இதன் மூலம் பொன்னேரி அகலப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.