தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்துணவு பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான சமையல் போட்டி - District-level food competition

அரியலூர்: சத்துணவு பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான சமையல் போட்டி நடைபெற்றது.

சமையல் போட்டி

By

Published : Aug 7, 2019, 5:35 PM IST

அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆறு ஒன்றியங்களிலுள்ள சத்துணவு மையங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சமையல் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் அடுப்பினைப் பயன்படுத்தாமல் இயற்கைச் சார்ந்த உணவுப் பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என சத்துணவுப் பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

சத்துணவு பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான சமையல் போட்டி

இதன்படி சத்துணவுப் பணியாளர்கள் கேழ்வரகு புட்டு, ரவா லட்டு, பயறு வகைகளைக் கொண்டு உணவுப் பதார்த்தங்கள், ராகி லட்டு, அவல் பதார்த்தங்கள் என முழுக்க முழுக்க இயற்கைச் சார்ந்த உணவுகளை அடுப்பில்லாமல் செய்துஅசத்தினர்.

இந்த சமையல் போட்டியினை அரியலூர் கோட்டாட்சியர் சத்யநாராயணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உள்ளிட்டோர் பார்வையிட்டு, இயற்கை உணவுகளை சுவைத்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details