கரோனா பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ரயில்வே துறை, பயணிகள் ரயில் போக்குவரத்தை 14ஆம் தேதிவரை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், கடந்த 9ஆம் தேதியில் இருந்து சரக்கு ரயில் போக்குவரத்தை படிப்படியாக அனுமதித்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
தினந்தோறும் சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் சரக்கு ரயில் காலையிலும், அதே மார்க்கத்தில் மாலையிலும் அரியலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அரியலூர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது பொருள்களை இன்று முதல் அனுப்பத் தொடங்கியுள்ளனர்.