அரியலூரைச் சேர்ந்த 25வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த 18ஆம் தேதி காய்ச்சல் அறிகுறியுடன் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்ந்தார். அவருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பெண் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருக்கும் அப்பெண் தனது சோகம் மறைய டிக் டாக்கில் நான்கு வீடியோக்களை பதிவிட்டுள்ளார். மேலும், அவருக்கு மருத்துவ உதவிகள் புரிந்த ஒப்பந்த மருத்துவ தூய்மை பணியாளர்கள் மூன்று பேர் செல்போனை பயன்படுத்தியதால், அவர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பில் உள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் பதிவிட்ட டிக் டாக் வீடியோ உடனடியாக நீக்கம் செய்யப்பட்டது. அந்தப்பெண் ஒரே நாளில் கரோனா குறித்த சோக கீதங்களை விதவிதமான கெட்டப்பில் நான்கு பாடல்களை டிக் டாக்கில் பதிவிட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா பாதிப்பு நோயாளி, டிக் டாக்குகளை பதிவிட்டு வருவது மற்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
டிக் டாக் வீடியோ செய்த கரோனா நோயாளி சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் கையில் செல்போன் எப்படி வந்தது. சிகிச்சை பெற வந்த இடத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். மருத்துவத்துறையினர் அந்நோயாளிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க:'சித்த மருத்துவத்தால் கரோனாவை குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்யப்படுகிறது'