அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கரோனா விழிப்புணர்வாக நகரில் உள்ள நான்கு ரோட்டில் கரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்வி, ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ராமஜெயலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.