அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட 13 பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. அதேபோன்று பி.ஏ ஆங்கிலம், வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வும் இன்று தொடங்கியுள்ளது. ஆங்கில பாடப்பிரிவில் 50 இடங்களுக்கும், வணிகவியல் பிரிவில் 104 மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் கலந்தாய்வு தொடங்கியது - arts and science college
அரியலூர்: அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.
கலந்தாய்வு
இந்த கலந்தாய்வில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். மேலும், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு முறையில் இந்த கலந்தாய்வு பின்பற்றப்படுகிறது. அறிவியல் பிரிவுகளுக்கு நாளை மறுநாள் காலை கலந்தாய்வு நடக்க இருக்கிறது.